சில வரி செய்திகள்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
06:20

மீனவரை கொன்றவர்கள் கைதுதிருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர், ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குப்பன், 47, மீனவர். இவர், 14 ம் தேதி அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிய வீடு கட்டினார். இதற்கு, பக்கத்து நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.இதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குப்பன், சிகிச்சை பலனின்றி, 19 ம் தேதி இறந்தார். இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், மீனவரை அடித்துக் கொன்ற ரகு, 45; மோகன், 36 மற்றும் துரைராஜ், 56, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வாலிபரை வெட்டிய இருவர் கைதுதிருவொற்றியூர்: திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த ராஜேஷ், 21, நேற்று முன்தினம் இரவு, கங்கையம்மன் நகர், மதுபானக் கடை வழியாக சென்ற போது, அங்கிருந்த இருந்த இருவர், குடிபோதையில் வீண் தகராறு செய்தனர்.மேலும் அவர்கள், கத்தியால் வெட்டியதில், ராஜேஷ் காயமடைந்தார்.அருகிலிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். சாத்தாங்காடு போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய, ராஜாஜி நகரைச் சேர்ந்த சீனிவாசன், 20, முரளி, 20, ஆகியோரை, நேற்று காலை கைது செய்து, விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டுஅயனாவரம்: அயனாவரம், திரு.வி.க.,தெருவைச் சேர்ந்தவர் வசீகரன், 71. அவர் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் பார்த்து, அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த, இரண்டரை சவரன் நகை, 5 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அதேபோல், பரசுராமன் கோவில் தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம், 68 என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, அரை சவரன் நகையையும், அதே பகுதியில் வசிக்கும், பிரபுகுமாரின் இருசக்கர வாகனத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.சிறை கைதி பலிசெங்கல்பட்டு: சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் கமல், 37. இந்நிலையில், 23ம் தேதி, அதே பகுதியில் ஒரு வாலிபர் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில், மெரினா போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர். கமலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சிறை மருத்துவர், நேற்று முன்தினம், முதலுதவி சிகிச்சை அளித்தார். பின், தீவிர சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி கமல் நேற்று இறந்தார்.ஆசிரியருக்கு 'போக்சோ'திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், 46. தேர்வாய்கண்டிகை அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி ஆசிரியர். வீட்டின் அருகே, 6ம் வகுப்பு படித்து வரும், 11 வயது சிறுமியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அச்சிறுமி, தன் பெற்றோரிடம் இதை பற்றி கூறியதை அடுத்து, அவர்கள் அளித்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் சுந்தரராஜனை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X