நெல் நடவு முதல் அறுவடை வரை.. இயந்திரமயம்! விவசாய கல்லூரி விழிப்புணர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
07:26

மதுரை : விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரை விவசாய கல்லுாரியில் இயந்திரங்கள் மூலம் 100 ஏக்கரில் நெல் நடவு முதல் அறுவடை வரை பணிகள் நடக்கின்றன.



விதைத்தல், நாற்று தயாரித்தல், களை எடுத்தல் போன்ற பணிகள் அதிக செலவு பிடிக்கும். இதற்கான வேலையாட்கள் கிடைப்பதும் கஷ்டம். இதனால் விவசாயிகள் இயந்திரமயமாக்கல் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது நீடித்த விவசாயத்திற்கு உதவும். ஆனால் உழவு மற்றும் அறுவடை இயந்திரங்கள் தவிர மற்ற இயந்திரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு குறைவு என்கின்றனர் விவசாய கல்லுாரி டீன் பால்பாண்டி, உழவியல் துறைத்தலைவர் துரைசிங்.



அவர்கள் கூறியதாவது: கோ 51, ஏடிடி 45, ஏடிடி 54, போன்ற சன்ன ரகங்கள் இயந்திர நடைமுறைக்கு ஏற்றது. அம்பை 16 மோட்டா ரகம் கேரளாவில் விரும்பப்படுகிறது. வைகை அணை 1, பிகேஎம் 13 ரகங்களும் குறுவைக்கு ஏற்றது. தண்ணீர் திறந்த மறுநாளே விதைப்பு, நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கினால் அறுவடை முடிந்து 2ம் போகத்திற்கும் தயாராகலாம். விதைப்பதற்கு முன் நிலத்தை மட்டப்படுத்துவதற்கு கருவி உள்ளது.



அரியானா, பஞ்சாப்பில் இம்முறையில் நீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கின்றனர். கருவி மூலம் வரப்பை வெட்டி மெழுகி விடுவதால் வயல்களில் எலித்தொல்லை குறையும். விதைகளை விதைப்பதற்கு டிரம் சீடர் கருவி உள்ளது. சரியான இடைவெளி கிடைப்பதால் பயிர்களுக்கு இடையே காற்றோட்டம் கிடைத்து பூச்சிதாக்குதல் குறையும். கோனாவீடர் கொண்டு களை எடுப்பதும் எளிது. பூச்சிமருந்து தெளிப்பதற்கு ஸ்பிரேயர், ட்ரோன் ஸ்பிரேயர் உள்ளது.



ட்ரோன் மூலம் வரப்பிலிருந்தே வயலுக்கு மருந்து தெளிக்கலாம். இதனால் மருந்தின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பை தவிர்க்கலாம். நாற்று மூலம் நட விரும்பினாலும் 15 நாட்கள் நாற்றை இயந்திரங்கள் மூலம் நடலாம், என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
25-ஜூன்-202116:08:21 IST Report Abuse
Loganathan Kuttuva இயந்திரங்கள் மூலம் பயிர் செய்வதால் விவசாயிகளுக்கு அதிக நன்மை லாபம் கிடைக்கும் .
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
25-ஜூன்-202109:47:41 IST Report Abuse
Manian அது சரி, அரியான மாமூல் ரேட்டு எவ்வளவு? தமில் தேசத்தில் ரேட் இதுக்கு என்ன? மாமூல் ஏஜண்டுகள் பெயர், தொடர்பு எண்கள் தேவை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X