அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கான 2.2 ஏக்கர் நிலம் அதிரடி மீட்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2021
00:26
பதிவு செய்த நாள்
ஜூன் 29,2021 02:27

குரோம்பேட்டை: நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது.


குரோம்பேட்டை நெமிலிச்சேரியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது.பழைய பல்லாவரத்தில், பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலையை ஒட்டி, இக்கோவிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம் உள்ளது.அகற்றப்படும்அந்த நிலத்தை 2012ல் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, மெக்கானிக் கடை, பழைய இரும்பு குடோன் என 11 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.
இதையறிந்த அதிகாரிகள், 2017-ல் ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு - 78-ன் கீழ், நடவடிக்கை மேற்கொண்டனர். ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.அந்த நீதிமன்றம், 2018ல் வெளியேற்று உத்தரவை பிறப்பித்தது. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனரகம் உத்தரவின் படி, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்கும் பணி, நேற்று காலை துவங்கியது.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன், ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


ஒப்படைப்புஇப்பணியை ஆய்வு செய்த பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை, யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அவற்றை அகற்றி சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அகஸ்தீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பு உட்பட, 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
30-ஜூன்-202107:35:39 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan லயோலா கல்லூரி நிலத்தைமீட்க எந்த ஆண்பிள்ளையாவது இருக்கிறானா?
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
29-ஜூன்-202123:00:21 IST Report Abuse
Ketheesh Waran நிலத்தை ஆக்ரமித்திருந்தவர் அதிமுக கட்சியைச் சார்ந்தவர் . தமிழகத்தில் சைவம் தழைத்தோங்க அதிமுக கட்சி நிரந்தரமாக தமிழகத்தில் இருந்து நீக்கபட வேண்டும்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
02-ஜூலை-202104:35:24 IST Report Abuse
meenakshisundaramஉண்மையில் அதிமுக உறுப்பினர்கள் நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்து ஆன்மீகத்தை பரப்புகிறார்கள்.வழிபாடு செய்கிறார்கள்.அதனால் இந்த கருத்து வெறுப்பில் சொல்லப்பட்டதாகவே உள்ளது....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஜூன்-202121:45:00 IST Report Abuse
Pugazh V நேர்மறை கருத்து களையும் பாராட்டுகளையும் ஏழுதியவர்களுக்கு நன்றி. பாஜக அதிமுக வாசகர்கள் சத்தமே வரக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X