வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2021
06:40

உளுந்துார்பேட்டை : மணலுார்பேட்டை அருகே சொத்து தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில் உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் ஒருவர் சரணடைந்தார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை அடுத்து ஞானம்பெற்றாள்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சின்னகண்ணு. இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சின்னகண்ணு தன்னிடம் உள்ள 12 ஏக்கர் நிலத்தை பிள்ளைகளுக்கு பாகம் பிரித்து வழங்காமல் இறந்து விட்டார்.இதனால் மகள்களான பென்னரசி, தனம், சிவகாமி, மற்றும் மகன் ரங்கநாதன் குடும்பத்தினரிடையே அடிக்கடி சொத்து காரணமாக தகராறு இருந்து வந்தது.



இந்நிலையில் பென்னரசியின் மகன் கோவிந்தன், 30; ரங்கநாதனின் மருமகனான சேட்டு, 39; ஆகியோருக்கிடையே கடந்த 13ம் தேதி தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சேட்டு, கோவிந்தனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவானார்.மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் சேட்டு, உளுந்துார்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் மாஜிஸ்திரேட் ரோஸ்கலா முன்னிலையில் நேற்று சரணடைந்தார்.சேட்டுவை 3 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பேரில் சேட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X