'டிக்கெட்... டிக்கெட்...': இலவச பயணத்தால் தொடரும் சோதனை: 'மெமோ'க்களால் அலறும் பஸ் நடத்துனர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஜூலை
2021
10:27
பதிவு செய்த நாள்
ஜூலை 21,2021 07:11

மதுரை : மதுரையில் இலவச பஸ்களில் பெண்கள் 'டிக்கெட்' எடுக்காமல் பயணித்தால்

நடத்துனர்களுக்கு 'மெமோ' கொடுக்கப்படுகிறது. இது போக்குவரத்து ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



நகரில் 20 சதவீதம், மாவட்ட பகுதிகளில் 40 சதவீதம் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெண்கள் காத்திருந்து பயணிப்பதால் கூட்டம் அதிகமாகவே உள்ளது. பயணிகளுக்கு கட்டணம், மாற்றுத்திறனாளி, இலவசம் என மூவகை டிக்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன. அவை ஒரே கலரில் உள்ளதால் கூட்ட நெரிசலில் 'டிக்கெட்' கொடுப்பது நடத்துனர்களுக்குசவாலாக உள்ளது.



அவர்கள் கூறியதாவது: அரசு பஸ்களில் 'மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை' என சிவப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது. இதே அளவு இதே கலரில் 'அரசு பஸ்சில் நோட்டீஸ்

ஒட்டத் தடை. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற 'ஸ்டிக்கரும்' உள்ளது. இதை கவனிக்காத பெண்கள் இலவச பஸ் என நினைத்து கட்டண பஸ்களில் ஏறி 'டிக்கெட்' எடுக்காமல் வாக்குவாதம் செய்கின்றனர். 'செக்கிங்' வந்தால் நடத்துனருக்கு 'மெமோ' கொடுக்கின்றனர். இதுவரை 40 நடத்துனர்கள் 'மெமோ' பெற்றுள்ளோம். ஏற்கனவே 'பேட்டா' குறைந்துள்ள நிலையில் இதுபோன்ற சம்பவம் தினமும் எங்களுக்கு சோதனையாக உள்ளது. கலர் குழப்பத்தை தவிர்க்க இலவசத்திற்கு வெள்ளை கலர் 'டிக்கெட்' வழங்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26-ஜூலை-202111:17:05 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அறிவாளிகள் சட்டம் போடணும் . மற்றவர்கள் போட்டால் இப்படித்தான். தவிர இலவச பிச்சைக்கு ஓடுவதில் தமிழகத்தை மிஞ்ச ஆளில்லை .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஜூலை-202119:35:42 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த திட்டம் மிகவும் அபத்தம். நிறைய பெண்கள் சும்மா ஊர் சுற்றுகின்றனர்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இதைத்தான் பேட்டெண்ட் சட்டம் என்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X