கல்குவாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கல்குவாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2021
23:16

கிணத்துக்கடவு, : பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு கிழக்குப்பகுதி குவாரிகளில், சப் - கலெக்டர் அதிரடி ரெய்டு நடத்தி, நடவடிக்கை எடுப்பது போல, மேற்கு பகுதியிலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என,மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



கிணத்துக்கடவு கிழக்குப்பகுதியில் கல்குவாரிகள் மற்றும் கல்லுடைக்கும் கிரஷர்கள் அதிகளவில் செயல்படுகின்றன.பல இடங்களில், செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு, லோடு கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன.அதேபோல, கற்களும் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. கனிமவளம் தொடர்ந்து, கொள்ளை போவது குறித்து,பொள்ளாச்சி சப் - கலெக்டருக்கு புகார் சென்றது.இதையடுத்து, பனப்பட்டியில் நள்ளிரவு ரெய்டு நடந்தது. இதில், மண் தோண்டி எடுக்கும் பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக இருவர் மீது வழக்கு தொடரப்பட்டது.



இதனால், அனுமதியின்றி லாரிகளில், அளவுக்கு அதிகமாக செம்மண், கருங்கல் கடத்துவோர் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்தின் மேற்கு பகுதி குவாரிகளில் இருந்து கருங்கல் மற்றும்எம்சான்ட் அனுமதிக்கப் பட்டதற்கு மாறாக,கூடுதல் பாரத்துடன் கேரளாவுக்குஅத்துமீறி கொண்டு செல்லப் படுகின்றன. குறுகலான கிராம ரோடுகளில், அதிகபாரம் ஏற்றிய லாரிகள் வேகமாக செல்வதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இப்பகுதியில், பொள்ளாச்சி சப் - கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், ரோடுகள் சேதமடைவதை தடுக்கவும், அதிவேக லாரிகளை கட்டுப்படுத்தி,மக்களின் அச்சத்தை போக்கவும், அத்துமீறல்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X