உறைகிணறுகளால் உயர்ந்தது நிலத்தடி நீர் மட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:14

சூலுார், : சூலுார் வட்டார கிராமங்களில் அமைக்கப்படும், உறைகிணறுகள் மற்றும் தடுப்பணைகளால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.



சூலுார், சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்தில், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைகளுக்காக, அதிக அளவில் போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. 1,000 அடிக்கு கீழ்தான் தண்ணீர் கிடைக்கிறது.இந்நிலையில், மாவட்டம் முழுக்க நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திட்டமிடப்பட்டது. நீர் வழித்தடங்களில், உறை கிணறு, நீர் செறிவூட்டும் தடுப்பணைகள் கட்டும் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.



'வாழும் கலை' அமைப்பினர், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எங்கு நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளது, ஆறு, குளம் குட்டைகளுக்கு சீராக நீர் செல்லும் வழித்தடங்கள் எங்கு உள்ளன, எந்தெந்தப்பகுதிகளில் நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இதையடுத்து, அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் வாயிலாக, பணிகள் நடக்கின்றன.



உறைகிணறுகள்கிட்டாம்பாளையம், காடுவெட்டி பாளையம், அரசூர், செம்மாண்டாம் பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், 100க்கும் மேற்பட்ட உறைகிணறுகள், நீர் செறிவூட்டும் தடுப்பணைகள் கட்டப்பட்டன.நடப்பாண்டில் கணியூர் ஊராட்சியில், செல்லப்பம்பாளையம், ஊஞ்சப்பாளையம், சங்கோதிபாளையம், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட, 20 இடங்களில், உறைகிணறுகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.'வாழும் கலை' அமைப்பின், நதி புனரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், சூலுார், அன்னூர், சர்க்கார் சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை ஒன்றியங்களிலும், திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திலும், இதுவரை, 320க்கும் மேற்பட்ட உறைகிணறுகள், 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.



நீர் வழித்தடங்களில், 20 அடி ஆழத்துக்கு குழிகள் எடுக்கப்பட்டு, வளையங்கள் அமைக்கப்படுகின்றன. 15 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட தடுப்பணைகள் போல்டர் கற்கள் மூலம் அமைக்கப்படுகின்றன. அவ்வழியே மழைநீர் வரும்போது, உறைகிணறுகளில் சேகரமாகும். இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. தற்போது, சுல்தான்பேட்டை பகுதியில் பல இடங்களில் பணிகள் நடக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார். ''எங்கள் பகுதியில் பல உறைகிணறுகள், தடுப்பணைகள் கட்டப்பட்டதால், 1,500 அடிக்கு கீழ் இருந்த நிலத்தடி நீர்மட்டம், இரு ஆண்டுகளில், 100 அடிக்கு உயர்ந்துள்ளதால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம்''.



- ஜானகிசெம்மாண்டாம்பாளையம் ஊராட்சித் தலைவர்''எங்கள் ஊராட்சியில், 20 மேற்பட்ட இடங்களில் உறைகிணறுகள், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மழைக் காலங்களில் வரும் நீர், அவற்றில் சேகரமாகி சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது''.-வேலுச்சாமிகணியூர் ஊராட்சித்தலைவர்

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X