நிதி கிடைக்குமா? தென்னை சாகுபடியில் சீரமைப்பு பணிக்கு...வளர்ச்சி வாரிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:15

உடுமலை : 'வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலால், கருகிய தென்னை மரங்களை அகற்றுதல் உட்பட பணிகளுக்காக, தென்னை வளர்ச்சி வாரியத்தின் சீரமைப்பு நிதியை மத்திய அரசு கூடுதலாக ஒதுக்க வேண்டும்,' என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், 70 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன.சில ஆண்டுகளுக்கு முன், போதிய தண்ணீர் இல்லாமல், உடுமலை சுற்றுப்பகுதியில், மட்டும், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகின; பின்னர், துவங்கிய வெள்ளை ஈ தாக்குதல் தற்போது வரை குறையாமல், சாகுபடியில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



தட்பவெப்ப நிலை மாற்றத்தால், வாடல் உட்பட பல்வேறு நோய்த்தாக்குதல் பரவி, காய்ப்புத்திறன் குறைந்து, பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இவ்வாறு, நோய்த்தாக்குதலால் கருகிய மரங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மரக்கன்றுகள் நடுவது அவசியமாகும். பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கும், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, மறுநடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இந்நிலையில், தென்னை சாகுபடியை சீரமைத்தல், நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த, மத்திய அரசு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் நிதி ஒதுக்குகிறது.இந்த நிதி, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: தொழிலாளர் பற்றாக்குறை, நிலத்தடி நீர் மட்டம் குறைவு ஆகிய காரணங்களால், தென்னை சாகுபடியிலிருந்து மாற்று சாகுபடிக்கு செல்ல முடியவில்லை.புதிதாக தென்னங்கன்று நடவு செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பராமரிப்பு ஆகியவற்றுக்கு, தென்னை வளர்ச்சி வாரியம், சார்பில், வழங்கப்படும் சீரமைப்பு நிதியை வேளாண்துறை வாயிலாக, மாநில அரசு பெற்றுத்தர வேண்டும். இது எங்களுக்கு நிவாரணமாகவும் அமையும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.செயல்விளக்கத்திடல் அவசியம்தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னை சாகுபடியில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும், தொழில்நுட்பங்களை, செயல்படுத்த, செயல்விளக்க திடல் அமைக்கும் திட்டம் முன்பு பயன்பாட்டில் இருந்தது.இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, விளைநிலத்தில், செயல்விளக்க திடல் அமைக்கப்படும். இத்திட்டத்தையும், மீண்டும் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X