மாநகராட்சி கமிஷனர் மீது டில்லியில் புகார் | மதுரை செய்திகள் | Dinamalar
மாநகராட்சி கமிஷனர் மீது டில்லியில் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:24

மதுரை:மதுரை மாநகராட்சியில் ஜூலை 12ல் தொடர் துாய்மை பணிகளில் அதிக வேலை வாங்குவது, ஊதியம் தருவதில் தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



அப்போது அங்கு வந்த தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், கமிஷனர் கார்த்திகேயனை பேச அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறி, தர்ணாவில் ஈடுபட்டார்.வெங்கடேசன் கூறுகையில், ''அன்று மூன்று முறை கமிஷனரை பேச அழைத்தேன். நான்காவது முறை அழைத்த போது வந்தார்.



பேசிக் கொண்டிருந்த போதே பாதியில் அவமதித்து சென்றதால் தர்ணா செய்தேன். ''இதுகுறித்து ஜனாதிபதி, தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தமிழக கவர்னர், முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளேன்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X