மனித உரிமை ஆணையம் தலையீடு கல்விக்கடன் வழங்க வங்கி ஒப்புதல் | தேனி செய்திகள் | Dinamalar
மனித உரிமை ஆணையம் தலையீடு கல்விக்கடன் வழங்க வங்கி ஒப்புதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:27

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் அடிமாலியில் முதலில் கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கி மனித உரிமை ஆணையம் தலையிட்டதால் ஒப்புதல் வழங்கியுள்ளது.



மூணாறு அருகே ஆனச்சால் தோக்குபாறையைச் சேர்ந்த மனோகரன் தனது மகனுக்கு கல்வி கடன் கேட்டு அடிமாலி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் விண்ணப்பித்தார். கடன் தர வங்கி சம்மதித்தது. இதையடுத்து பிறரிடம் கடன் பெற்று மகனை ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்தார்.



இந்நிலையில் ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரம் என வருமான சான்றிதழ் வங்கியில் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சம் இல்லாததால் கடன் வழங்க மறுத்தது. அவரது மகனால் கல்வியை தொடர முடியாத நிலையில் கடன் சுமையும் அதிகரித்ததால் மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகினார்.



ஆணைய தலைவர் நீதிபதி ஆண்டனிடொமினிக் தலையிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு வங்கிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ரூ.3 லட்சம் கல்வி கடன் வழங்குவதாக வங்கி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X