காட்டுயானை தாக்கி பெண் பலி | தேனி செய்திகள் | Dinamalar
காட்டுயானை தாக்கி பெண் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:29

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே கோரம்பாறையை சேர்ந்தவர் விமலா 45. இவர் கணவர் சிரஞ்ஜீவி, மகன்கள் இளங்கோவர், கோபி ஆகியோருடன் நேற்று தலக்குளம் பகுதியில் உள்ள சொந்த ஏலத்தோட்டத்தில் வேலை செய்தார். மேகமூட்டத்துடன் பலத்த மழை பெய்தது. அங்கு முகாமிட்டிருந்த 4 காட்டு யானைகளை விமலா அறியவில்லை. மதியம் 2:30 மணிக்கு காட்டு யானையிடம் சிக்கிய விமலா இறந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X