எல்லையில் புலி நடமாட்டம் அச்சத்தில் இருமாநில மக்கள் | நீலகிரி செய்திகள் | Dinamalar
எல்லையில் புலி நடமாட்டம் அச்சத்தில் இருமாநில மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:13

பந்தலுார் : நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய வயநாடு பகுதியில், புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், இருமாநில எல்லையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.பந்தலுார் பகுதியை ஒட்டிய, கேரள மாநிலம் வயநாடு மீனங்காடி பகுதியில் கடந்த வாரம் குடியிருப்பு பகுதியில் புலி நடமாடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.



இதனை ஒட்டிய அம்பலவயல் நகரப் பகுதி அடுத்துள்ள, சீரால், நம்பிக்குன்னு, வரிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று நடமாடி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம், களத்துவயல் என்ற இடத்தில் தனியார் தோட்டத்தில் குரைக்கும் மான் ஒன்றை புலி வேட்டையாடி இருப்பது தெரியவந்துள்ளது. புலியின் கால் தடத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ள நிலையில் புலி எங்கு உள்ளது என்பது கண்டறிய கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் புலி நடமாடி வருவதால், தமிழக- கேரள மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X