மணல் கடத்திய லாரி பறிமுதல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மணல் கடத்திய லாரி பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:20

தொண்டாமுத்தூர் : இருட்டுபள்ளத்தை அடுத்த பெருமாள் கோவில்பதியில் உள்ள பள்ளத்தில், இரவு நேரத்தில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, காருண்யா நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சட்டவிரோதமாக மணல் கடத்தி கொண்டு இருப்பது தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்ட, ஆனைகட்டியை சேர்ந்த சின்ராஜ், 41 என்பவரை கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும், பறிமுதல் செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X