மாணவருக்கு இலவச 'சிம்கார்டு' பட்டியல்  தயாரிக்க உத்தரவு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மாணவருக்கு இலவச 'சிம்கார்டு' பட்டியல்  தயாரிக்க உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:23

திருப்பூர் : ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் விதமாக, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச சிம்கார்டு வழங்குவதற்கான பட்டியலை தயாரிக்க, கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.



தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி பாடம் கற்க ஏதுவாக கடந்த முறை, 2 ஜி.பி., சிம்கார்டு வழங்கப்பட்டன.இதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், 2020-21 கல்வி ஆண்டுக்கான இளநிலை, 3ம் ஆண்டு, முதுநிலை, 2ம் ஆண்டு பயிலும் மாணவர்களும் பட்ட மேற்படிப்பை முடித்து விட்டர்.எனவே, புதிய கல்வியாண்டின் இளநிலை, 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு பயில உள்ள மாணவர்களுக்கும் இணையவழி பாடம் நடத்தப்பட உள்ளதால் சிம்கார்டு தேவை அவசியமாகியுள்ளது.



இதன்கீழ், 2021-22 கல்வியாண்டில் உள்ள இளநிலை, 2, 3ம் ஆண்டு முதுநிலை, 2ம் ஆண்டு, எம்.பில்., முதலாமாண்டு இளநிலை, முதுநிலை பயில உள்ள அரசு, அரசு உதவிபெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொகுக்கப்பட்டு வருகின்றன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X