கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை பணி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:30

திருப்பூர் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், உறுப்பினராக சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினராக சேரவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பம் பெற்று, உறுப்பினராக சேரலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, இரண்டு 'பாஸ்போர்ட்' அளவு போட்டோ, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.பங்கு தொகையாக, 100 ரூபாயும், நுழைவு கட்டணமாக, 10 ரூபாயும் நேரடியாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதனால், கூட்டுறவு கடன் சங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையம் பெற்று பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X