என்.டி.சி., ஆலைகளை இயக்க கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
என்.டி.சி., ஆலைகளை இயக்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:52

கோவை, : தொ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யூ., பஞ்சாலை சங்கங்கள் சார்பில் என்.டி.சி., பஞ்சாலைகளை முழுமையாக இயக்க வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.



தெற்கு தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொ.மு.ச., பஞ்சாலை சங்க பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, சி.ஐ.டி.யூ., பஞ்சாலை சங்க பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழகத்தில் என்.டி.சி., ஆலைகளை முழுமையாக இயக்க வேண்டும். இந்த ஆலைகளை 'கன்வெர்ஷன்' அடிப்படையில் தனியார் சூறையாட அனுமதிக்கக்கூடாது. தொழிலாளர் அனைவருக்கும் அலுவலர்களுக்கு வழங்குவது போல், முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள், மத்திய அரசுக்கு எதிராக எழுப்பப்பட்டன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X