பார்சல் கட்டுவதில் கவனம் வேண்டும்! | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பார்சல் கட்டுவதில் கவனம் வேண்டும்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:55

திருப்பூர் : உணவு பண்டங்கள் பரிமாறவும், பார்சல் செய்யவும், சாதாரண காகிதங்களை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.



திருப்பூரிலுள்ள ஓட்டல்களில், தொடர் ஆய்வு நடத்தப்படுகிறது. உணவு பரிமாறும் போதும், பார்சல் தயாரிக்கும் போதும், ஒருமுறை பயன்படுத்தும், பாலிதீன் காகிதங்களை பயன்படுத்தக்கூடாது. சூடான உணவு பண்டங்களை செய்தித்தாள்களில் வைத்து பரிமாறக்கூடாது. உணவு பார்சல் தயாரிக்கும் போதும், அவற்றை பயன்படுத்தக்கூடாது.பாலிதீன் காகிதத்துக்கு, வாழை இலையை மட்டும் பயன்படுத்த வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகள், விரைவில் கெட்டுப்பேக வாய்ப்பிருந்தால், தயாரிப்பு தேதியை, மக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். ஓட்டல் ஊழியர்கள், கண்டிப்பாக, முக கவசம், தலை கவசம், கையறை அணிந்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.நடவடிக்கை பாயும்!உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:உணவு பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றாத, எட்டு ஓட்டல்களுக்கு நோட்டீஸ் மற்றும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய ஓட்டல்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற உணவு தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.உணவு பார்சல் செய்யும் போது, காகிதங்களை உமிழ்நீர் தொட்டு எடுக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். விதிமுறைகளை மீறினால், உணவு பாதுகாப்பு சட்டவிதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.'டயல்' செய்யுங்க...ஓட்டலில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு, பார்சல் வழங்குவது தொடர்பான புகார்களை, 94440 42322 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என உணவு பாதுகாப்பு துறையினர் அறிவித்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X