பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
02:09

கோவை : பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, அலகுத்தேர்வு நடக்கவுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.



கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்காததால், கடந்தாண்டு பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததோடு, பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வியில் சேர வேண்டுமென்பதற்காக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், ரிசல்ட் வெளியிடப்பட்டது.நடப்பு கல்வியாண்டிலும், இந்நிலை தொடருமா என்ற, கேள்வி இருப்பதால், மாணவர்கள் மத்தியில் கற்றலில் ஆர்வம் குறைந்து விட்டது. பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியிட முடியாத சூழலில், சிலபஸ் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.



இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாதாந்திர சிலபஸில் இருந்து, அலகுத்தேர்வு நடத்தப்படும் என, செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.இம்மாத இறுதியில் தேர்வு நடத்தப்படவுள்ளதாகவும், 50 மதிப்பெண்களுக்கு, பொது வினாத்தாள் தயாரித்து, பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும், சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''இயக்குனரகத்தில் இருந்து, அலகுத்தேர்வு நடத்துவது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது, மாதாந்திர சிலபஸ் அடிப்படையில், பாடங்களை நடத்தி முடிக்க, ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகள் சார்பில், அவ்வப்போது தேர்வு நடத்திக்கொள்ளலாம். பொது வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்த உத்தரவிட்டால், செயல்படுத்த தயாராக உள்ளோம்,'' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X