வாய்க்காலில் பழக்குவியல் அகற்றம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வாய்க்காலில் பழக்குவியல் அகற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
02:12

பல்லடம் : பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் உள்ள பி.ஏ.பி., வாய்க்காலில், பழங்கள் குவியலாக கிடந்தன.தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்யும் சிலர், பல கிலோ எடையுள்ள கொய்யா மற்றும் மாம்பழங்களை வாய்க்காலில் வீசியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான செய்தி 'தினமலர்' திருப்பூர் பக்கத்தில், நேற்று வெளியானது.செய்தியின் எதிரொலியாக, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று பழக்குவியல்களை அப்புறப்படுத்தி வாய்க்காலை சுத்தம் செய்தனர். பழங்களை வாய்க்காலில் கொட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X