நொய்யலில் வீசப்படும் மது பாட்டில்கள் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
நொய்யலில் வீசப்படும் மது பாட்டில்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
02:24

திருப்பூர் : நொய்யல் ஆற்றில் சேரும் ஓடையின்கரையில் மதுபாட்டில் குவிந்துக் கிடக்கும் அவலம், இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.திருப்பூர் நகரின் வழியே நொய்யல் ஆறு செல்கிறது.



அதில், சாக்கடை மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது சகஜமாக உள்ளது. இதில், சில இடங்களில் குப்பை, கட்டட மற்றும் இறைச்சி என அனைத்து கழிவுகள் என கழிவுகளின் சங்கமமாகவே நொய்யல் மாற்றப்பட்டு விட்டது.இதில், தற்போது புதிய கழிவாக, மது பாட்டில் குவியல்களும், நொய்யலை அழிக்க வந்துள்ளது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பகுதியிலிருந்து ஒரு ஓடை திருநகர் துணை மின்நிலையம் அருகே நொய்யலில் கலக்கிறது.



அதில், தீபம் அறக்கட்டளை உயர் மட்டப் பாலம் அருகே நுாற்றுக்கணக்கான மது பாட்டில்கள் குவியலாக கொட்டி கிடக்கிறது. அரசு மதுக்கடை பார்கள் மூடப்பட்டுள்ளதால், விரோதமாக இயங்கும் மது பாரில் சேகரமான மது பாட்டில்கள் இங்கு கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம்.மழை பெய்தால் இந்த பாட்டில்கள் நொய்யலுக்குள் அடித்து செல்லப்படும். இவை உடைந்து சேதமானாலும் விபரீதங் கள் ஏற்படும். இயற்கையை சீரழிக்கும் இது போன்ற செயல்களை செய்வோரை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X