'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' தபால்நிலையத்தில் விழிப்புணர்வு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' தபால்நிலையத்தில் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
02:31

கோவை : மத்திய அரசின், 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டம் குறித்து, தபால்நிலையத்தில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.



சுயதொழில் முனைவோரைஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், தபால்நிலையத்தில் 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், தேசிய பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் இளைஞர்கள், புதிய நிறுவனத்தை துவங்குவதற்கு, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஆலை மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கான கடனுக்கான மானியம் ரூ.2.5 லட்சம் வரை, இலவச திறன் பயிற்சி மற்றும் பணிக்கருவிகள், கடன் நிலுவைத் தொகைகளுக்கான தள்ளுபடி என, பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.



இந்த திட்டம் குறித்து,கோவைப்புதுார் தபால்நிலையத்தில், விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் கண்ணன் கூறுகையில், ''படித்திருந்தாலும் பலருக்கு, அரசின் கடனுதவி திட்டங்கள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை. இது போல கிராமப்பகுதிகள் உட்பட, அனைத்து தபால்நிலையங்களிலும், விழிப்புணர்வு செய்யலாம். சுயதொழில் மேற்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X