பெண் போலீஸ் உட்பட இருவரிடம் நகை பறிப்பு  | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பெண் போலீஸ் உட்பட இருவரிடம் நகை பறிப்பு 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
02:34

கோவை : பெண் போலீஸ் மற்றும் பேராசிரியையிடம், நகை பறித்து தப்பிய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 23. கோவை மாநகர ஆயுதப்படை, 4வது பட்டாலியனில் போலீசாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சகோதரியுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.ஏ.டி.டி., காலனி ரோட்டில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த நபர், பெண் போலீஸ் கழுத்திலிருந்த, 2 பவுன் நகையை பறித்து தப்பினார். அதிர்ச்சியடைந்தவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.



இதேபோன்று, கே.கே., புதுார், ராமலிங்க நகரை சேர்ந்தவர் சாந்தி, 46. தனியார் கல்லுாரி பேராசிரியரான இவர், நேற்று முன்தினம் வீடு திரும்பி கொண்டிருந்தார். பஸ்சில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர், அவரது கழுத்திலிருந்த, 5 பவுன் நகையை பறித்து தப்பினார். இதுகுறித்து, சாய்பாபாகாலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X