போதை ஊசி வழக்கு மேலும் இருவர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போதை ஊசி வழக்கு மேலும் இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
02:40

போத்தனூர் : போத்தனூர் அருகேயுள்ள ஜம் ஜம் நகரில் கடந்த ஏப்ரலில், போதை ஊசி செலுத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.



விசாரணையில், லத்தீப், பாரதி நகரை சேர்ந்த சித்திக், 29 ஆகியோருக்கு சம்பவத்தில் தொடர்புடையது தெரிந்தது. தலைமறைவான இருவரையும், போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, லத்தீப், சித்திக் இருவரும் சிக்கினர்.விசாரணையில், வேலூர், பெங்களூரு பகுதிகளிலிருந்து, மாத்திரைகளை வாங்கி வந்ததும், அவற்றை பொடியாக்கி, மருந்துடன் கலந்து ஊசி மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு செலுத்தி, 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளதும், தெரிய வந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X