கொப்பரை விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கொப்பரை விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:18

திருப்பூர் : கொப்பரை விலை சரிவால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தென்னை விவசாயிகள், இளநீர், தேங்காய் மற்றும் கொப்பரை வாயிலாக, வருமானம் ஈட்டுகின்றனர். கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் இருந்ததை காட்டிலும், கொப்பரை விலை, கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.மத்திய அரசு, கிலோவுக்கு, 103.55 ரூபாய் நிர்ணயம் செய்திருந்தாலும், 102 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆதார விலை கிடைக்காததால், தென்னை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையுடன், ஊக்கத்தொகையும் வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.இளநீர் மற்றும் தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'அரசு நிர்ணயத்துள்ள விலை கிடைக்காதபட்சத்தில், அரசே கொள்முதல் செய்யும். எந்த வகையிலும், கொப்பரை கொள்முதலில் நஷ்டம் ஏற்பட்டதில்லை. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ கொப்பரை, 150 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும். ஆனால், 102 ரூபாய் மட்டும் கிடைக்கிறது. அரசு, கொப்பரை விவசாயிகளுக்கு, கிலோவுக்கு, 20 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X