கால் வலிக்கு பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் நகை கொள்ளை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கால் வலிக்கு பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் நகை கொள்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:34

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில், கால்வலிக்கு பூஜை செய்வதாகக் கூறி, மூதாட்டியிடம் 11 சவரன் நகைகளை நுாதன முறையில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடுகின்றனர்.கள்ளக்குறிச்சி, காந்தி ரோட்டைச் சேர்ந்தவர் சீத்தாபதி மனைவி ராஜலட்சுமி, 63; சீத்தாபதி தனியார் மருத்துவமனை மெடிக்கலில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை, சீத்தாபதியும், மகன் தயாநிதியும் வேலைக்குச் சென்று விட்டனர்.வீட்டில் ராஜலட்சுமியும், படுத்த படுக்கையாக உள்ள அவரது வயது முதிர்ந்த தாயார் தேசம்மாளும் இருந்தனர். காலை 11:00 மணியளவில், அறிமுகம் இல்லாத ஆசாமி ஒருவர் வீட்டிற்கு வந்து, ராஜலட்சுமியின் கால் வலிக்கு பூஜை செய்ய சீத்தாபதி சார் அனுப்பியதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராஜலட்சுமி, அந்த நபரை வீட்டிற்குள் அழைத்து வந்து பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.பூஜையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் என்று அந்த நபர் கூறியதால், 11 சவரன் அளவில் செயின்களை ராஜலட்சுமி கொடுத்துள்ளார். கை, கால்களை கழுவி வருமாறு அந்த நபர் கூறியதால், பாத்ரூமிற்குள் சென்றபோது அந்த நபர், பாத்ரூம் கதவை மூடி, வெளியே உள்ள தாழ்ப்பாளை போட்டுவிட்டு நகைகளுடன் தப்பிச் சென்றார். கதவை நெம்பி திறந்து வெளியே வந்த ராஜலட்சுமிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, நகைகளுடன் தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X