திட்டவட்டம்: கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு ... சீராய்வு கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பேச்சு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:38

கொரோனா மேலாண்மை குறித்து, வாராந்திர 21வது ஆய்வுக் கூட்டம், நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது.



கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி., ரன்வீர் சிங் கிருஷ்ணியா, அரசு செயலர்கள் வல்லவன், அருண், உதயக்குமார், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.தேசிய சுகாதார இயக்கக திட்ட இயக்குநர் ஸ்ரீராமுலு, கொரோனா மேலாண்மை மாநில பொறுப்பு அதிகாரி ரமேஷ், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பங்கேற்றனர்.கூட்டத்தில், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி பணி உள்ளிட்டவை குறித்து, சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார், விளக்கினார்.



ஜிப்மர் குழந்தை நல டாக்டர், குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்புகள் குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.கொரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை காப்பது மற்றும் பள்ளி, கல்லுாரிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப் பட்டது.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கவர்னர் தமிழிசை பேசியதாவது:புதுச்சேரியில், கொரோனா இறப்பு விகிதம் குறைந்திருப்பது ஆறுதல் தருகிறது. அரசு மருத்துவக் கல்லுாரியில் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவை, வண்ண ஓவியங்களுடன் தயார் செய்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது.கொரோனா நிலவரம் குறித்து தீவிர கண்காணிப்பிற்கு பிறகே பள்ளி, கல்லுாரிகளை படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.அதற்கு முன்பாக பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பெருமளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும். அதனால் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இணைநோய் உள்ளவர்கள், முதியவர்கள், விடுபட்ட முன்களப் பணியாளர்கள், பள்ளி ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.



அது, கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான அடிப்படை தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்.தடுப்பூசி இலக்கை அடைய கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். புதிய தொற்றுகள் குறித்து கவனமாகவும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X