சித்தானந்தா சுவாமி கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு | செய்திகள் | Dinamalar
சித்தானந்தா சுவாமி கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:39

புதுச்சேரி-கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், ஆடி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.புதுச்சேரி இ.சி.ஆர். கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்தா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, சாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, தேவ சேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X