சுருக்கு வலைக்கு தடை கோரி தொடரும் மீனவர்கள் போராட்டம் | செய்திகள் | Dinamalar
சுருக்கு வலைக்கு தடை கோரி தொடரும் மீனவர்கள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:46

புதுச்சேரி-சுருக்கு வலைக்கு தடை விதிக்க கோரி, மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி கடந்த சில நாட்களாக சில மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். எனவே, சுருக்கு வலைக்கு தடை விதிக்க கோரி, புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலான 18 மீனவ கிராமத்தினர் கடந்த 19ம் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். விசைப்படகு, பைபர், எப்.ஆர்.பி. உள்ளிட்ட அனைத்து படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. ஏற்கனவே மீன்பிடித்து கரை திரும்பிய படகுகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்கள், மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X