பா.ஜ., நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி | செய்திகள் | Dinamalar
பா.ஜ., நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:46

புதுச்சேரி-புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மாநில நிர்வாகிகளுக்கு 'வெளியுறவு கொள்கை' எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடந்தது.காணொலி மூலம் நடந்த பயிற்சி வகுப்பிற்கு, மாநில பொதுச்செயலர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதன், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பயிற்சி வகுப்பில், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் சார்க் நாட்டு தலைவர்களை அழைத்து அவர்களின் நட்பை பெற்றது குறித்து விளக்கப்பட்டது.மேலும், இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பயிற்சி வகுப்பு அமைப்பாளர் பாலாஜி, இணை அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X