'மியாட்' இருதயவியல் நிபுணர் 24ம் தேதி புதுச்சேரி வருகை | செய்திகள் | Dinamalar
'மியாட்' இருதயவியல் நிபுணர் 24ம் தேதி புதுச்சேரி வருகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:47

புதுச்சேரி-சென்னை மியாட் மருத்துவமனை இருதயவியல் நிபுணர், வரும் 24ம் தேதி புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். சென்னை மியாட் மருத்துவமனை இருதயவியல் நிபுணர் டாக்டர் விஜய்பாலாஜி, வரும் 24ம் தேதி, மாலை 5:00 மணி முதல் 9:00 வரை, புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி, திபாஷ் மருத்துவமனையில் ஆலோசனை வழங்குகிறார். மார்பு வலி, அசவுகரியம், வியர்வை, சோர்வு, உணர்வின்மை, தலைச்சுற்றல், கை, கழுத்து அல்லது தாடைகளில் அதிகரிக்கும் வலி, கால்களில் வீக்கம், படபடப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை, இதய சிக்கல்களின் அறிகுறிகள் ஆகும்.மியாட் மருத்துவமனையின் இதய நிபுணர்கள் குழு, ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்டிங், பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சையில், பிரத்யேக நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவர். மேலும், ஏ.எஸ்.டி. வி.எஸ்.டி., பி.டி.ஏ., டிவைஸ் குளோஷர், பேஸ்மேக்கர்கள், ஐ.சி.டி., சி.ஆர்.டி., சிகிச்சையில் பிரத்யேக நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.டாக்டர் விஜய் பாலாஜியின் ஆலோசனை பெற முன்பதிவு கட்டாயம். 93840 83062, 98412 68500 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். ஆலோசனை கட்டணம் ரூ. 200. முந்தைய மருத்துவ பதிவுகள் இருந்தால் கொண்டு வர வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X