இரவல் வாங்கிய காரை தர மறுப்பதாக மின் துறை அதிகாரி மீது புகார் | செய்திகள் | Dinamalar
இரவல் வாங்கிய காரை தர மறுப்பதாக மின் துறை அதிகாரி மீது புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:50

புதுச்சேரி,இரவல் வாங்கிச் சென்ற டொயோட்டா இன்னோவா காரை திருப்பித் தர மறுப்பதாக, போலீசில் தம்பி மீது அண்ணன் புகார் கொடுத்துள்ளார்.கோரிமேடு காமராஜ் நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் தென்னரசு,52. இவரது மனைவி சுமித்ரா,45. தென்னரசுவின் தம்பி வெங்கடேசன், 55. தமிழக மின்சார துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இவர், தனக்கு உடல்நிலை சரியில்லை; அலுவலகம் சென்றுவர 3 மாதத்திற்கு கார் தேவைப்படுகிறது என கூறி, தென்னரசுவின் இன்னோவா காரை கடந்த மார்ச் 8ம் தேதி வாங்கிச் சென்றார்.அதன்படி, காரை திருப்பி கேட்டபோது, தர முடியாது என வெங்கடேசன் கூறி உள்ளார்.இது தொடர்பாக தென்னரசுவின் மனைவி சுமித்ரா, கோரிமேடு போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில், காஞ்சிபுரம் திருவஞ்சேரி பெருமாள் புரத்தில் வசிக்கும் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X