நகராட்சி பள்ளியில் ஆன்லைன் வாட்ஸ் ஆப் குழுவில் கற்பிப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
நகராட்சி பள்ளியில் ஆன்லைன் வாட்ஸ் ஆப் குழுவில் கற்பிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:53

விழுப்புரம்,-விழுப்புரம் மருத்துவமனை வீதி நகராட்சி தொடக்கப் பள்ளியில் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாட்ஸ் ஆப் குழு மூலம் கற்பிக்கும் முறை வரவேற்பை பெற்றுள்ளது.விழுப்புரம் மருத்துவமனை வீதியில் நகராட்சி தொடக்க பள்ளியில் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்து மாணவர்களுடைய பெற்றோரின் வாட்ஸ் ஆப் எண்ணை பெற்று ஒவ்வொரு வகுப்பிற்கும் குழு உருவாக்கி பாடம் நிகழ்வுகளை இணையவழி மூலம் கற்பிக்கின்றனர்.மேலும், அரசு அளித்துள்ள பிரிட்ஜ் பயிற்சி புத்தகங்களை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வாட்ஸ் ஆப் குழு மூலமே பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளி கொரோனா காலத்தில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடம் நடத்தி வருவது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X