பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:57

விழுப்புரம்-பக்ரீத் பண்டிகையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடந்தது.முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்துவதோடு, இறைச்சியை 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து கொண்டாடுவதைத்தான் ஈகைத் திருநாளாம் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் காலை 7:00 மணியளவில் சிறப்பு தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.செஞ்சியில் சந்தை தோப்பு பள்ளி வாசலில் நடந்த தொழுகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று தொழுகை நடத்தினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X