23 சவரன் நகை கொள்ளை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
23 சவரன் நகை கொள்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:58

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த 23 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மோழியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் சாமி மனைவி லட்சுமிபிரியா, 29; விவசாயி. கடந்த 20ம் தேதி கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்குச் சென்றிருந்தனர்.பிற்பகலில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 23 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X