விவசாயிகளுக்கு ரூ.5க்கு இயற்கை உரம் பேரூராட்சி அதிகாரிகள் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:02

சின்னசேலம்-சின்னசேலம் நகரில் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சின்னசேலம் பேரூராட்சியில் நாள்தோறும் சேகரிக்கும் குப்பைகள் ஊழியர்கள் மூலம் கூகையூர் ரோட்டில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.இந்த குப்பையை மர்ம நபர்கள் அடிக்கடி தீயிட்டு கொளுத்துவதால், அப்பகுதி புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில், கடலுார் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் வெங்கடேசன் கடந்த மாதம் சின்னசேலத்தில் ஆய்வு செய்தார்.அப்போது, குப்பைகளை முறையாக தரம் பிரித்து அப்புறப்படுத்தி, உரம் தயாரிக்க வேண்டும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.இதனையடுத்து, சின்னசேலம் பேரூராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.மேலும், மக்கும் குப்பைகளை திறந்த வெளியில் குவியலாக (வின்ட்ரோ பேட்) முறையில் மக்கச்செய்து, பின் இயந்திரத்தின் மூலம் மக்கிய உரமாக மாற்றப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.மக்காத குப்பையான பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேகரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தினை விவசாயிகள் கிலோ 5 ரூபாய்க்கு வாங்கி சென்று நிலத்திற்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மண்புழு உரம் தயாரிக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X