கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை  | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:02

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடந்தது.பக்ரீத் பண்டிகையையொட்டி, இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்துவதோடு, இறைச்சியை 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து கொண்டாடுவதைத்தான் ஈகைத் திருநாள் என்கிறோம்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று, காலை 7:00 மணியளவில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X