மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி | கடலூர் செய்திகள் | Dinamalar
மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:09

வடலுார்--குறிஞ்சிப்பாடி அருகே புலியூர் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அனுசுயா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தோட்டக்கலை இணை இயக்குனர் ராஜேந்திரன் பங்கேற்று மண் புழு உரம் தயாரிப்பு குறித்து விளக்கி பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் வெங்கடேசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா ராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ், உதவி வேளாண்மை அலுவலர் ரம்யா உட்பட 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X