நிர்வாகிகள் பொறுப்பேற்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
நிர்வாகிகள் பொறுப்பேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:10

நெய்வேலி-நெய்வேலி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, வட்டம் 20ல் உள்ள உலக தமிழர் கழக வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு, துணை ஆளுனர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் முத்துசாமி, சங்கரன், புலேந்திரன், குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் முரளிதரன் வரவேற்றார். மாவட்ட ஆளுனர் செல்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் துணை ஆளுனர்கள், ரோட்டரி கிளப் ஆர்ச்கேட், பவர்சிட்டி, கிரீன்சிட்டி, வடலுார் ரோட்டரி கிளப் மற்றும் உலக தமிழ் கழகத்தினர் பலர் பங்கேற்றனர்.நெய்வேலி ரோட்டரி சங்க தலைவராக பஞ்சாட்சரம், செயலராக ரமேஷ், பொருளாளராக சர்மா பொறுப்பேற்றனர். விழாவில் ஏழை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X