கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 59 ஆயிரத்து 669 பேர். நேற்று 79 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 59 ஆயிரத்து 748 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் குணமடைந்ததால், இதுவரை 58 ஆயிரத்து 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.தொற்று பாதித்த 835 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை தொற்று பாதித்து 802 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று இறப்பு இல்லை.