ஜூலை 26 - ஆக.10 வரை போலீஸ் உடற்தகுதி தேர்வு | மதுரை செய்திகள் | Dinamalar
ஜூலை 26 - ஆக.10 வரை போலீஸ் உடற்தகுதி தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:19

மதுரை : தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 26 முதல் உடற்தகுதி தேர்வு நடக்கிறது.



மதுரை மாவட்டத்தில் தகுதி பெற்ற 2727 பேருக்கு ஆக.,10 வரை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தேர்வு நடக்கிறது.இதில் பங்கேற்போர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் வரவேண்டும். அதற்கு முன்னதாக 4 நாட்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதன் அசல் சான்று, இணையதளத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க சமர்ப்பித்த சான்றுகளின் அசல், நகல்கள் மற்றும் அழைப்பு கடிதத்துடன் வரவேண்டும்.



முகக்கவசம் கட்டாயம். அழைப்பு கடிதத்தில் போட்டோ இல்லாமல் இருந்தால் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை எடுத்து வரவேண்டும்.விண்ணப்பத்தாரர்கள் எந்த வாசகமும், அடையாள அச்சும் இல்லாத பல வண்ணங்கள் இல்லாத மேல்சட்டை, கால் சட்டை அணிந்து வரவேண்டும் என மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X