சினிமா தயாரிப்பாளர் மீது உதவி இயக்குனர் புகார் | சென்னை செய்திகள் | Dinamalar
சினிமா தயாரிப்பாளர் மீது உதவி இயக்குனர் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:22

மதுரவாயல்-மதுரவாயல் அருகே, சினிமா உதவி இயக்குனரை தாக்கியதாக தயாரிப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.மதுரவாயல், ருக்மணி நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன், 39. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இவர்கள், பேச்சிமுத்து என்பவர் தயாரிக்கும் படத்தில் பணிபுரிந்தனர். மூவருமே சினிமா துறையில் அறிமுகம்.நான்கு மாதங்களாக காளீஸ்வரனுக்கு ஊதியம் வழங்கப்படாததால், பேச்சிமுத்துவிடம் ஊதியம் கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டபோது, பேச்சிமுத்து மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம், காளீஸ்வரனை தாக்க முயன்றனர்.அப்போது மகேந்திரன் தடுக்க முயன்றார். ஆத்திரமடைந்த பேச்சிமுத்து, மகேந்திரனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.மேலும் காளீஸ்வரன், மகேந்திரன் தங்கியுள்ள வீட்டை பூட்டி, பேச்சிமுத்து சென்று விட்டார். அந்த வீட்டிற்குள் இருவரது உடைமைகள் மற்றும் பொருட்கள் இருந்துள்ளன. காளீஸ்வரன் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X