6 லட்சம் மகளிர் இலவச பயணம்.. | சென்னை செய்திகள் | Dinamalar
6 லட்சம் மகளிர் இலவச பயணம்..
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:24

சென்னை--மாநகர பஸ்களில், தினமும் 6 லட்சம் மகளிர் இலவசமாக பயணிக்கின்றனர்.முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின், அரசு போக்குவரத்து கழக சாதாரண கட்டண பஸ்களில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், மாற்றுத் திறனாளியின் உதவியாளர் ஆகியோர் இலவசமாக பயணம் செய்யும் சலுகையை அறிவித்தார். அப்போது முதல் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும், 2,700 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இவற்றில், 50 சதவீதம் சாதாரண கட்டண பஸ்கள். இவற்றில் தினமும், 6 லட்சம் மகளிர் இலவச பயணம் மேற்கொள்கின்றனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா ஊரடங்குக்கு பின், அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பெரும்பாலும் கூட்டம் இல்லாத நிலை இருந்தது. தற்போது, இலவச பயண அறிவிப்பால், மகளிர் அதிகளவில் பயணிக்கின்றனர். அதாவது, வழக்கமாக தனியாரின் ஷேர் ஆட்டோ, கால் டாக்சி, இரு சக்கர வாகனங்களில் பயணித்தோரில், 30 சதவீதத்துக்கும் மேல், பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால், வாகன நெரிசல், எரிபொருள் பயன்பாடு குறையும். அதேநேரம், இலவச பயணத்துக்கு டிக்கெட் வழங்குவதால், அரசிடம் இருந்தும் உரிய மானியத்தை பெற முடியும். இதனால் அரசு போக்குவரத்து கழகங்களின் இயக்க செலவு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X