போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:25

எண்ணெய் பாக்கெட்டுகள் திருட்டு



மதுரை: சிக்கந்தர் சாவடியில் தமிழ்நாடு வர்த்தக மைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து 70 எண்ணெய் பாக்கெட்டுகள் திருடப்பட்டன. கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.



5 கிலோ கஞ்சாவுடன் கைது



மதுரை: வைகை வடகரையில் ஆசாரி தோப்பு பகுதியில் கஞ்சா விற்றதாக மதிச்சியம் கார்த்திக் 27, யாகப்பா நகர் 'இட்லி' கார்த்திக் 29, கைது செய்யப்பட்டனர். 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



கேமரா பறித்துசென்றவர் கைது



ஆஸ்டின்பட்டி: சம்பக்குளம் போட்டோகிராபர் விஜய்பாண்டி 23. இவரது கேமரா, அலைபேசியை 2 பேர் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக கோவையில் பதுங்கி இருந்த நிலையூர் விஸ்வாவை 22, போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.



கூட்டுறவு சங்கத்தலைவர் தலைமறைவு



சோழவந்தான்: கருப்பட்டி அ.தி.மு.க., பிரமுகர் செல்வகுமார் 28. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர். குடும்ப தகராறில் மனைவி காமாட்சியை 23, தாக்கி மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் பலத்த காயமடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். செல்வகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.



சிகரெட் தகராறில் கொலை



மதுரை: சக்கிமங்கலம் சமத்துவபுரத்தில் வினோத் 32, என்பவரின் சகோதரி பெட்டிக்கடை வைத்துஉள்ளார். இங்கு அதே பகுதி அருண்பாண்டி 21, 'அரேபியா' கார்த்திக் 21, ஜான்மணி 20, ஆகியோர் சிகரெட் கேட்டு தகராறு செய்தனர். இதை கண்டித்த வினோத்தை தாக்கினர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இறந்தார். மூவரும் கைது செய்யப்பட்டனர்.



மனைவி, மகள் இறப்பு; கணவர் மீது சந்தேகம்



மதுரை: கான்பாளையம் பிரான்சிஸ். நவதானிய கடை ஊழியர். இவரது காதல் மனைவி சண்முகப்ரியா 21. இவர்களது 9 மாத பெண் குழந்தை மயிமா. மது, கஞ்சாவுக்கு அடிமையான பிரான்சிஸ், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்தார். ஜூலை 18 ல் மனைவி, மகள் உடல்நலம் பாதித்து அடுத்தடுத்து இறந்தனர். பிரான்சிஸ் மீது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.



தந்தை, மகன் கைது



பாலமேடு: மாணிக்கம்பட்டி சூர்யா 22. வாடிப்பட்டி தனியார் நிதி நிறுவன ஊழியர். அலங்காநல்லுார் அருகே புதுப்பட்டி ரமேஷ் மனைவி அனிதாவிடம் 34, தவணை வசூல் செய்ய சென்றபோது வாக்குவாதம்ஏற்பட்டது. சூர்யாவை மரத்தில் கட்டிவைத்து அடித்த அனிதாவின் தந்தை ஆலடி 58, சகோதரர் மாதவனை 36, போலீசார் கைது செய்தனர்.



ஜல்லிக்கட்டு காளை முட்டி பலி



மதுரை: கருப்பாயூரணி மந்தைவீரன்36. தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு உணவு கொடுத்த போது முட்டியதில் இடது காலில் காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.



நகை பாலீஷ் மோசடி



வாடிப்பட்டி: ராமநாயக்கன்பட்டி நாராயணசாமி மனைவி சாந்தி 50. நேற்று காலை இவரிடமிருந்து தலா 2 பவுன் செயின், மோதிரத்தை பாலீஷ் செய்து தருவதாக கூறி நகையுடன் தப்பிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.



ஓய்வு போலீஸ் வீட்டில் திருடியவர்கள் கைது



சோழவந்தான்: சமயநல்லுார் டி.எஸ்.பி., பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன்தலைமையிலான தனிப்படை எஸ்.ஐ., வெங்கடேஷ், போலீசார் விஜய், மகேந்திரன், சரவணன் ஆகியோர் மேட்டுநீரேத்தான் பாலகிருஷ்ணன் 61, ஓய்வு ரயில்வே போலீஸ் வீட்டில் நடந்த திருட்டு குறித்து விசாரித்தனர். அதேபகுதி அர்ச்சுணன், 47, மணப்பாறை தங்கராஜை 27, கைது செய்து 12 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். அர்ச்சுணன் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.



ஆட்டோ மோதி பலி



மதுரை: எச்.எம்.எஸ்., காலனி முத்துராஜா 31. தனியார் நிறுவன ஊழியர். நேற்றுமுன்தினம் பணி முடிந்து டூவீலரில் வசந்தநகர் பகுதியில் வந்தபோது ஆட்டோ மோதி இறந்தார். ெஹல்மெட் அணியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.



மாணவன்'போக்சோ'வில் கைது



மேலுார்: கட்டயம்பட்டி அரசு பள்ளியின் 14 வயது மாணவி 4 மாத கர்ப்பிணியாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்து ஊர் நல அலுவலர் தேவி விசாரித்தார். அதே வகுப்பில் படிக்கும் உறவினரான மாணவர் கர்ப்பமாக்கியது தெரியவரவே அவரை 'போக்சோவில்' மேலுார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.



நண்பன் கொலை; நாடகமாடியவர் கைது



ஆஸ்டின்பட்டி: வடபழஞ்சி வெள்ளை பாறைபட்டி மூர்த்தி 38. மனைவி ஜெயா, 2 குழந்தைகள் உள்ளனர். ஜூலை 17ல் வேடர் புளியங்குளம் பகுதி கண்மாயில், சின்னசாக்கிலிபட்டி நண்பர் செல்வத்துடன் 38, குளித்தபோது மூழ்கி இறந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தியை கொலை செய்ததாக செல்வம் கைது செய்யப்பட்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X