போலீஸ் பணி உடற்தகுதி தேர்வு; ஜூலை 26 - ஆக., 3 வரை நடக்கிறது | விருதுநகர் செய்திகள் | Dinamalar
போலீஸ் பணி உடற்தகுதி தேர்வு; ஜூலை 26 - ஆக., 3 வரை நடக்கிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:34

விருதுநகர் : இரண்டாம் நிலைக் காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை காவலர்களுக்கான முதற் கட்ட உடற்தகுதி தேர்வு ஜூலை 26 முதல் ஆக., 3 வரை விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் பள்ளியில் நடப்பதாக எஸ்.பி.,மனோகர் கூறினார்.



அவர் கூறியதாவது: 26 முதல் 30 வரை 2228 ஆண்கள், ஆக., 2 முதல் 3 வரை 868 பெண்கள் என 3096 பேருக்கு நடப்பதால், இதன் விண்ணப்பதாரர்கள் 4 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையினை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.



கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பரி சோதனை அறிக்கையினை மருத்துவ சான்றுடன் தேர்வு மைய துணைக் குழுதலைவரிடம் வழங்க வேண்டும். இவர்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்தேர்வு நுழைவுச்ட்டை www.tnusrbonline.org.ல் பதிவு செய்து தேர்வு தேதி, நேரத்தை தெரிந்து கொள்ளலாம், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X