பா.ஜ., செயலரின் காரை உடைத்த மூவர் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
பா.ஜ., செயலரின் காரை உடைத்த மூவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:39

முகப்பேர்-பா.ஜ., மாநில செயலரின் கார் மீது தாக்குதல் நடத்திய மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர் சுமதி வெங்கடேஷ், 52; பா.ஜ., மாநில செயலர். இவர் தன் மகளுடன், 'டொயோட்டோ ஆல்டிஸ்' காரில், நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, பாடி, புறநகர் சந்திப்பில் அவரது கார் மீது இருசக்கர வாகனம் மோதியது.இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், இரும்பு கம்பியால் காரை அடித்து உடைத்தனர். இதில், கண்ணாடி உடைந்து நொறுங்கியது.ஜெ.ஜெ.நகர் போலீசார், பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பூபதி, 25, மணிகண்டன், 25, பிரேம்குமார், 25, ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X