'குறுகிய நடைபாதை அகலப்படுத்தப்படும்' | சென்னை செய்திகள் | Dinamalar
'குறுகிய நடைபாதை அகலப்படுத்தப்படும்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:44

செவ்வாப்பேட்டை--'செவ்வாப்பேட்டை ஊராட்சியில், சுடுகாடு செல்லும் குறுகிய நடைபாதையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ஊராட்சியில் உள்ள சுடுகாடு செல்லும் பகுதியின் சாலையில் உள்ள கிருஷ்ணா கால்வாய் மீது, குறுகிய நடைபாதை இருப்பதால், உடல்களை கொண்டு செல்வதில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து பொதுமக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர், கிருஷ்ணா கால்வாய் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதையடுத்து, கிருஷ்ணா கால்வாய் அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:கிருஷ்ணா கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள குறுகிய நடைபாதை குறித்து அரசுக்கு பரிந்துரைப்போம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன், குறுகிய நடைபாதையை அகலப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X