தனியார் ஆலையில் தீ; இயந்திரங்கள் எரிந்து நாசம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தனியார் ஆலையில் தீ; இயந்திரங்கள் எரிந்து நாசம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:45

விருதுநகர் : விருதுநகர் ரோசால்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே காபி பவுடர் தயாரிக்க தேவையான சிக்கரி உற்பத்தி செய்யும் தனியார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து நாசமானது.



ரெங்கநாதபுரத்தை சேர்ந்த பிரதீப் குமார், ராதீப் குமார் சொந்தமான இந்த ஆலையில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் தீ அருகில் உள்ள கோடவுனிலும் பரவியது. மண் அள்ளும் இயந்திரம் கொண்டு கோடவுன் பின்பக்கம் இடித்த நிலையில், தீயணைப்பு துறையினர் 15 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இயந்திரங்கள், சிக்கரி மூடைகள், மூலப்பொருட்கள் எரிந்தது. இதன் மதிப்பு ரூ.80 லட்சம் என போலீசார் தெரவித்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஊரக போலீசார் விசாரித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X