லாரியில் கடத்திய 51 பசுக்கள் பறிமுதல் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
லாரியில் கடத்திய 51 பசுக்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:48

நகரி-ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு லாரியில் கடத்திய 51 பசுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலம் சிலக்கலுாரிபேட்டை பகுதி யில் இருந்து, ரேணிகுண்டா வழியாக, லாரி மூலம் தமிழகத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவதாக, பசு பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பசு பாதுகாப்பு இயக்க தலைவர் யுவராஜ் மற்றும் உறுப்பினர் முரளி ஆகியோர், பசுக்கள் கடத்தப்படுவது குறித்து திருச்சானுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதை தொடர்ந்து போலீசார் ரேணிகுண்டா - சந்திரகிரி நெடுஞ்சாலையில், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின்பேரில், மடக்கி நிறுத்திய போது, லாரியில் 51 பசுக்கள் இருந்ததை கண்டு பிடித்தனர்.லாரியில் வந்த இருவர் தப்பியோடினர். மீட்கப்பட்ட பசுக்களை, திருச்சானுார் கோ சாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X