மாவட்ட தொழில் மையம் துவக்கம் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
மாவட்ட தொழில் மையம் துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:56

செங்கல்பட்டு-செங்கல்பட்டு வேதாசலம் நகரில், தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து, மாவட்ட தொழில் மைய புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.மாவட்ட தொழில் மையம் மூலம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதனால், மாவட்ட தொழில் மைய மேலாளரை அணுகி, தொழில் துவங்க ஆலோசனையும், 25 சதவீதம் மற்றும் 35 சதவீதம் வரையிலான மானியத்துடன் கடன் வசதி பெற்று, தொழில் துவங்கி பயன்பெற, ஆலோசனைகள் பெறலாம் எனவும், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X