கொரோனா ஊசி அவசியம் வாகனத்தில் விழிப்புணர்வு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
கொரோனா ஊசி அவசியம் வாகனத்தில் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:58

வாலாஜாபாத்-தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலையில், பலர் இறந்துள்ளனர். இதை தடுக்க அரசு, பல விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.ஊரடங்கு தளர்விற்கு பின் செயல்படுத்தி வரும், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும், 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு, கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை, புத்தகரம் உள்ளிட்ட பல கிராமங்களில், 100 நாள் வேலை நடக்கும் இடத்திற்கு வாகனத்தை எடுத்துச் செல்லப்படுகிறது.அந்த வாகனத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசும் கொரோனா தொற்று விழிப்புணர்வு குறும்படத்தை திரையிட்டு காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X